மூடுக

பழவேற்காடு

வழிகாட்டுதல்

தமிழ்நாட்டில், பழவேற்காடு நகரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரத்தின் வடக்கே கிட்டத்தட்ட 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, குறிப்பாக ஸ்ரீ ஹரிகோட்டா தீவுக்கும் வங்காள விரிகுடாவிற்க்கும் இடையில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. ஒரு குறுகிய நீர் குளம் மூலம் பழவேற்காடு எரி அமைந்துள்ளது அதனால் இந்த இடத்துக்கு பழவேற்காடு என்று பெயர் வந்தது.

பழவேற்காடு நகரத்திற்க்கு பின்னால் ஒரு பெரும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 1609 ஆம் ஆண்டின் முந்தைய காலப்பகுதியில் டச்சுகாரர்கள் குடியேறி கோட்டையை கட்டினார்கள். உண்மையில் இந்த பழவேற்காடு நகரம் அவர்களின் முக்கிய இடமாக மாறியது. பல படையெடுப்பாளர்கள் பழவேற்காடு நகரத்தை கைப்பற்றினர், கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பழவேற்காடை கைப்பற்றினர். 1825 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பழவேற்காடை ஆக்கிரமித்து, இதனால் இந்த நகரம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. பல ஆண்டுகளாக பழவேற்காட்டின் பொக்கிஷங்களை எடுத்து தங்கள் வசம் ஆக்கிக் கொண்டனர். இன்னும் பழவேற்காடு ஏரிக்கு எதிரே பழங்கால கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரிய அளவிலான ஒளி பரவியுள்ளது. மேலும் இக்கலங்கரை விளக்கு கடல் வழி பயணத்துக்கு மிகவும் பயணுள்ளதாக அமைந்துள்ளது.

பழவேற்காடு ஏரியின் கரையோரங்களுக்கு அருகில் அழகிய பறவைகளாக பழவேற்காடு பரந்து விரிந்துள்ளது. அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன. பல தரப்பட்ட பறவையினங்கள் இந்த ஏரிக்கு வந்தாலும் முக்கியமாக இளஞ்சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறம் கொண்ட இறகுகள் உள்ள, நீண்ட கால்கள் மற்றும் கழுத்துடன் உயரமான நீளமுள்ள பறவைகள் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்ள இந்த ஏரிக்கு வருகிறது.

மேலும், அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, பழவேற்காடு நகரத்தில் சுற்றுலா மையம் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. பழவேற்காடை அடைய கோயம்பேடுவிலிருந்து கிட்டத்தட்ட 54 கி.மீ பயணம் செய்யவேண்டும். பின்னர் 100 அடி நீள சாலை வழியக சென்றால் “எண்ணுர் துறைமுகம்” வரும் அதன் பின் வலதுபுறம் திரும்பி முதலில் வரும் இடதுபுறம் சாலை (17 கி.மீ. நீளமான) வழியாக சென்றால் பொன்னேரி – பழவேற்காடு மத்திய சாலையை அடைந்து அதன் பின் வலது புறம் திரும்பி 4 கி.மீ. சென்றல் பழவேற்காட்டில் உள்ள படகு துறையை அடையலாம்.

தொழிற்சாலை என்று பார்த்தால், மென்மையான பனை இலைகளால் அழகான பொருட்கள் தயாரிக்கும் குடிசை கைவினை தொழில்கூடம் பெண்களால் நடத்தப்படுகிறது, குறிப்பாக முஸ்லீம் சமூக பெண்களால் இந்த தொழில்கூடம் பழவேற்காட்டில் நிறுவப்பட்டுள்ளது. பனை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் அழகான பொருட்களை உள்ளூர் கூட்டுறவு சங்கம் முலமாக ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு உள்ள கடல் உணவு ஏற்றுமதி மையம் முலமாக வெள்ளை மற்றும் புலி இறால்கள், குடை போன்ற உடல் உடைய இழுது மீன் வகைகள் மற்றும் உப்பங்கழியில் பிடிக்கும் மீன்களையும் நல்ல முறையில் ஏற்றுமதி செய்கின்ற வகையில் பழவேற்காடு சிறந்து விளங்குகிறது.

600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழவேற்காடு, சென்னைக்கு வடக்கே 55 கிமீ தொலைவில் உள்ளது. கோரமண்டல் கடற்கரையில் உள்ள பழவேற்காடை டச்சுக்காரர்கள் ஒரு முக்கிய இடமாக அமைந்தது கொண்டார்கள். கிழக்கு திசையில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்ய டச்சுக்காரர்கள் 1609 ஆம் ஆண்டில் “குல்டிரா” என்ற கோட்டையை பழவேற்காட்டில் கட்டினார்கள். பழவேற்காட்டிற்காக டச்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் பல போர்கள் நடந்தது. இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் 1825 ஆம் ஆண்டு பழவேற்காடை கைப்பற்றினர். பின்பு பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் சுற்றுலா அம்சமாக இந்த இடம் புகழ்பெற்றது.

புக்கிங்ஹாம் கால்வாய், கலங்கரை விளக்கம், கடலோர கிராமங்கள், நாட்டுப்புற மீனவர்கள், காளை வண்டிகள் மற்றும் படகு சவாரிகள் ஆகியவை பழவேற்காட்டிற்க்கு பெருமை அளிக்கின்றன. டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் கப்பல்களை கரிண்மானல் என்ற கிராமத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தியதாக நம்பப்படுகிறது மற்றும் இந்த இடம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இங்கே மிகவும் பாதுகாக்கப்பட்ட ஸ்ரீ ஹரிகோட்டா தீவில் இந்தியாவின் விண்வெளி மையம் அமைந்துள்ளது. பழவேற்காட்டிற்கு அருகில் ஜெமிலாபாத் என்ற கிராமம் உள்ளது இங்கு முற்றிலும் படகு கட்டுமாண பணிகள் நடக்கிறது மற்றும் சேஞ்சியம்மன் நகர் என்ற பழங்குடி மக்கள் வாழும் கிராமம் உள்ளது. மேலும் இங்கு உள்ள லேடி ஆஃப் குளோரி சர்ச், மற்றும் டச்சு கல்லறைகளை இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது அழகாக செதுக்கப்பட்ட கம்பீரமான கல்லறைகள்.

பனை இலைகளால் பெண்கள் தயாரிக்கப்படும் ஆடம்பரமான மற்றும் பயன்பாட்டு பொருட்கள் , கடல் உணவு ஏற்றுமதி ஆகியவை பழவேற்காட்டின் முக்கிய சிறப்பு அம்சமாகும். பழவேற்காட்டிற்க்கு அருகில் சென்னை விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம் உள்ளது. மேலும் இங்கு சாலை வழியாகவும் சென்னையில் இருந்து வரலாம்.

புகைப்படத் தொகுப்பு

  • பழவேற்காடு ஏரி
  • கலங்கரை விளக்கம், பழவேற்காடு
  • பழவேற்காடு ஏரி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் பொன்னேரி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி உள்ளூர் ரயில் சேவைகள் உள்ளன.

சாலை வழியாக

சென்னை மற்றும் அருகில் உள்ள நகரங்களிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளன.