மூடுக

அண்மைச் செய்திகள்

மாவட்டம் பற்றி

திருவள்ளூர், தெற்கு மாநிலமான தமிழ்நாட்டில் வேகமாக வளரும் மாவட்டம். இது சென்னை நகருக்கு அருகில் உள்ளது, இம் மாவட்டம்,  தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. இந்த வலைத்தளம்  மக்களுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையில் ஒரு புதிய சேனலைத் திறக்கும் முயற்சியாகும்.  மாவட்ட நிர்வாகத்திற்கு இது ஒரு சாளரத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம்.

திருவள்ளூர், சென்னை நகரத்திலிருந்து சுமார் நாற்பத்தி நான்கு கிலோமீட்டர் தொலைவில் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மற்றும் சென்னை-அரக்கோணம் இரயில் பாதை இடையே இந்த நகரத்தின் இரயில் நிலையம் உள்ளது. ஒரு சிறிய நகரமான திருவள்ளூர், மாவட்டத்தின் தலைமையகமாக ஆன பின் இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். முன்பு, திருவள்ளூர் நகரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.  திருவள்ளூர் என்பது நகரம் மற்றும் மாவட்டத்தின் பெயராகும்.  மேலும் வாசிக்க

மேலும் வாசிக்க
சகி, மகளிர் வள மையம் / One Stop Centre (OSC) ஒப்பந்த ஊழியர்களை தேர்வு செய்தல்

TLR_Collector
டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப.

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : திருவள்ளூர்
தலையகம் :  திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

 

பரப்பளவு :
மொத்தம் : 3422.43 ச.கி.மீ

 

மக்கள்தொகை :
மொத்தம் : 3728104
ஆண்கள் : 1876062
பெண்கள்: 1852042
ஊரகம் : 1299709
நகர்புறம் : 2428395