மூடுக

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

தேதி : 01/04/2008 - | துறை: ஊரக வளர்ச்சி

நோக்கங்கள்

  • இத்திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அக்குடும்பத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த இத்திட்டத்தில் வேலை
    செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது.
  • திருவள்ளூர் மாவட்டதில் 2008 – 09 ஆண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் நிலையான சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகிறது.
  • வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவைகளை தடுத்திட ஏதுவாக இயற்கை வளங்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி அடைதல்.
  • ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது.
  • ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தப்படுகிறது
  • மாற்றுதிறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிற்து.
  • ஊரட்சி நிர்வாகத்தால் வேலை அடையாள் அட்டை வழங்கப்படுகிறது. வேலை அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் இயந்திரங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
  • பணித்தளத்தில் அடிப்படை வசதிகளான் குடிநீர், நிழற்பந்தல், முதலுதவி பெட்டி, பணிவிவர பலகை மற்றும் குழந்தைகளை கவனிப்பதற்கான தனி நபர் ஆகிய வசதிகள் செய்யப்படுகிறது
  • கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்ட மற்றும் ப்ணிகளின் தொகுப்பிலிருந்து பணிகள் எடுத்து செய்யப்படுகிறது
  • ஊராட்சியில் உறுதியான, நெடுங்காலம் பயன்படக்கூடிய சொத்துக்கள் உருவாக்கப்படுகிறது.
  • ஊராட்சிகளில் பிற துறைகளுடன் இணைந்து உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • வேளாண்மை சார்ந்த பணிகளான நில மேம்பாட்டு பணிகளை பிற துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
  • சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் கிராம அளவிலான சமூக தணிக்கையாளர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
  • இத்திட்டதின்கீழ் பணிமேற்கொள்ளும் பயனாளிகளால் வெளிப்படைத்தன்மையுடன் சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் குறைகள் ஏதும் கண்டறியப்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது
  • தற்போழுது 2017 – 18 நிதியாண்டிற்கு ரூ. 205 கூலி வழங்கப்படுகிறது.
  • மின்னணு பரிவர்தனை மூலம் பயனாளிகளுக்கு அவர்களின் வ்ங்கிக் கணக்கில் நேரடியாக கூலி தொகை ஈடுசெய்யப்படுகிறது.
MGNREGS1

அனுமதிக்கப்படும் பணிகள்

1) பொதுப்பணிகளான இயற்கை வள மேம்பாட்டு பணிகள் நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை கட்டமைப்பு, நுண்ணிய சிறு பாசன பணிகள் உருவாக்குதல், பாசன கால்வாய்கள், வடிகால்களை புதுபித்தல் மற்றும் ஊரக சுகாதாரம்.

2) ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் தனிநபர் சொத்து உருவாக்குதல்

MGNREGS2

நில மேம்பாட்டு பணிகள் (கிணறு தோண்டுதல் மற்றும் பண்ணை குட்டை), தோட்டக்கலை, பட்டுப்புழு உற்பத்தி, செடிகள் வளர்த்தல், பயன்பாடற்ற நிலங்களை மேம்படுத்தல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருதல், ஆடு, மாடு மற்றும் கோழி கொட்டகைகள் கட்டுதல்.

3) சுய உதவி குழுக்களுக்கு உட்கட்டமைப்பு உருவாக்குதல்

வேளாண்மை சார்ந்த உருவாக்கப்படும் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்.

4) ஊரக உட்கட்டமைப்பு

தனிநபர் இல்லக்கழிவறை, வெள்ளக் கால்வாய்களை ஆழப்படுத்துதல், மழைநீர் கால்வாய்கள் கட்டுதல், கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம், வட்டார ஊராட்சி சேவை மையக் கட்டிடம், அங்கன்வாடி மையக் கட்டிடம், தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்.

5) வங்கி கணக்கு

இத்திட்டத்தின்கீழ் பணி செய்யும் அனைத்து பயனாளிகளுக்கும் வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

  1. மொத்த அடையாள அட்டைகள் : 283361
  2. வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் சதவீதம் : 100%

அடிப்படை விவரங்கள்

வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் ஊராட்சிகளின் எண்ணிக்கை குழுக்களின் எண்ணிக்கை குக்கிராமங்களின் எண்ணிக்கை மொத்த ஊரக குடும்பங்களின் எண்ணிக்கை மொத்த பதிவு செய்யப்பட்ட ஊரக குடும்பங்களின் எண்ணிக்கை
1 வில்லிவாக்கம் 13 28 157 13518 7431
2 புழல் 7 15 60 7597 4744
3 மீஞ்சூர் 55 148 517 40707 31807
4 சோழவரம் 39 76 340 23560 16257
5 கும்மிடிப்பூண்டி 61 122 410 41932 34857
6 திருவாலங்காடு 42 87 202 23189 23876
7 திருத்தணி 27 75 224 18179 17880
8 பள்ளிப்பட்டு 33 99 231 16140 17562
9 இரா. கி. பேட்டை 38 95 287 19393 27793
10 திருவள்ளூர் 38 88 431 30526 25129
11 பூண்டி 49 93 331 26178 20872
12 கடம்பத்தூர் 43 78 255 22070 19936
13 எல்லாபுரம் 53 142 247 32073 24017
14 பூந்தமல்லி 28 48 169 16635 13425
மொத்தம் 526 1194 3861 331697 285586
மாற்று திறனாளிகளுக்கு வேலை வழங்கிய விவரம்
வ.எண். ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட மாற்று திறனாளிகள் 2017-18 ஆம் ஆண்டில் வேலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 2017-18 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனித வேலை நாட்கள்
1 வில்லிவக்கம் 71 45 3337
2 புழல் 37 22 1726
3 மீஞ்சூர் 179 130 7386
4 சோழவரம் 143 114 8103
5 கும்மிடிப்பூண்டி 159 74 3777
6 திருவாலங்காடு 270 196 13045
7 திருத்தணி 304 191 13856
8 பள்ளிப்பட்டு 83 36 2314
9 இரா.கி.பேட்டை 673 406 18517
10 திருவள்ளூர் 249 171 12755
11 பூண்டி 152 61 3472
12 கடம்பத்தூர் 146 88 6358
13 எல்லபுரம் 189 87 4717
14 பூவிருந்தவல்லி 59 31 2296

சமூக தணிக்கை

  • 2016 – 17 ஆண்டு வரை 526 ஊராட்சிகளிடம் சமூக தணிக்கை நடைபெற்று முடிவடைந்துள்ளது.

புவிசார் குறியீடு Geo MGNREGA

  • பகுதி 1 – 01.11.2017 முன்னர் உருவாக்கப்பட்ட அணைத்து சொத்துகளும் புகைப்படம் எடுத்து புவன் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
  • பகுதி 2 – 01.11.2017 பின்னர் தொடங்கப்படும் பணிகளை பொருத்த வரை பணிகள் துவக்குவதற்கு முன், நடைபெறும்போது, முடிவுற்றப்பின் புகைப்படம் எடுத்து புவன் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஆதார் எண் பதிவேற்றுதல்

  • மொத்தம் 283361 வருகை தரும் பணியாளர்களில், இதுவரை 282455 பணியாளர்களின் ஆதார் விவரங்கள் 99.7 % சதவீதம் இத்திட்ட வளைதளத்தில்
    பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 89% 250549 பணியாளர்களின் ஆதார் விவரம் வங்கியுடன் இணைத்து ஆதார் மூலம் கூலித்தொகை வழங்கப்படுகிறது.