மூடுக

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

அறிமுகம்

இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறகணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படித்தக்கூடிய துன்பச்சூழல்களைத் திறம்பட குறைத்துக்
குழந்தைகளுக்கு விசலமான, வலிமைமிக்க பாதுகாப்பான் சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இளஞ்சிறார் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 சட்டப்பிரிவு 80-ன் படி மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கமும் அதற்கான பணியாளர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது நடைமுறை செயல்பாட்டில் உள்ள இளம்சிறார் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகப்பு) சட்டம் 2015-ன்படி இந்தியா முழுமைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும் ஏற்படுத்தி அதற்கான் பணியாளர்களை மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும் என் கூறப்பட்டுள்ளதின் தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையின் பிரிவு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் கடந்த 2012-ல் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகப்பு அலகு ஆகிய இரண்டு அமைப்புகளையும் உருவாக்கப்பட்டது.

திட்டங்கள்

நிதி ஆதாரவுத்திட்டம்

குழந்தைகள் அனாதை குழந்தைகளாக இருப்பது மற்றும் விரிவாக்கப்பட்ட குடும்பத்தில் வசிப்பது பெற்றொர் உயிரை பயமுறுத்தும் பிணியால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது. நிதி வழியாகவும் உடல் ரீதியாக பராமரிக்க இயலாதவர்களாக இருப்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் துணை நிலை உதவியை குடும்பங்களுக்கு பொறுப்பேற்கும் குழந்தைகள் காப்பகத்திற்கு மற்றும் சிறப்பு காப்பகங்களுக்கு குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படும் நோக்கத்தில் குழந்தைகளின் மருத்துவம், சத்துணவு, கல்வி மற்றும் குழந்தைகளின் மற்றைய தேவைகளுக்காக உதவிடும் திட்டம்.

நிதி ஆதரசு திட்டதின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் விவரம் 2012 முதல் 2017 வரை
ஆண்டு பயனாளிகள்
2012 – 2013 0
2013 – 2014 25
2014 – 2015 24
2015 – 2016 41
2016 – 2017 41

பிற்காப்புத் திட்டம்

18 வயது நிறைவடைந்ததின் பேரில் குழந்தை எதுவும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியேறிடும்போது அந்தக் குழந்தை சமூக நீரோட்டத்தில்
வகுத்துரைக்கபடலாகும் பாங்கினில் மீண்டும் இணையும் வகையில் அதற்கு நிதியுதவி செய்யும் திட்டமாகும்.

பிற்காப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் விவரம் 2012 முதல் 2017 வரை
ஆண்டு பயனாளிகள்
2012 – 2013 0
2013 – 2014 0
2014 – 2015 9
2015 – 2016 15
2016 – 2017 16

வளர்ப்பு பராமரிப்புத் திட்டம்

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை பராமரிப்பு வளர்ப்பகத்தில் தங்க வைக்கலாம். ஒரு குடும்பம் என்பதில் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோரின் குடும்பம் அல்லது குழந்தையை தத்தெடுத்த பெற்றோரின் குடும்பம் அல்லது இந்த நோக்கதிற்காக மாநில அரசாங்கத்தால் ஒரு குறுகிய காலத்திற்கு அல்லது நீட்டிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு குழந்தைகள் வளர்ப்பு குடும்பத்தை தேர்வு செய்து குடும்பத்தின் ஆற்றல், நோக்கம், குழந்தை பராமரிப்பில் முன்னதாக உள்ள நோக்கம் ஆகியவற்ரின் அடிப்படையில் வளர்ப்பு பராமரிப்பிற்கு பரிந்துரை செய்வது.

குழந்தைகள் இல்லங்கள்

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தை அல்லது சட்டத்துடன் முரண்பட்ட குழந்தை, தங்கவைக்கப்படுவதற்கு முழுமையாகவோ அல்லது பகுதியளவோ மாநில அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது தன்னார்வத்தொண்டு நிறுவணம் அல்லது அரசாங்கம் சாராத அமைப்புகளால் நடத்தப்படும் அணைத்து நிறுவனங்களும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் அது மத்திய / மாநில அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்றிருந்தாலும் இல்லையென்றாலும் பதிவு செய்தல் வேண்டும்.

திறன்வளர் பயிற்சி 2013 முதல் 2017 வரை2017
ஆண்டு திறன்வளர் பயிற்சியின் எண்ணிக்கை பயனாளிகள்
2013 21 1650
2014 17 2363
2015 1 48
2016 18 1241
2017 20 1381
Total 77 6683

குழந்தை நலக்குழு

குடும்ப பராமரிப்பு கிடைக்காமல் அனாதையாக விடப்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை இனம் கண்டறிந்து அந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு அரசை சார்ந்தது என் இளைஞர் நீதிச் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் கூறியுள்ளது. இதன்படி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் பின்னனியை ஆய்வு செய்து குழந்தைக்கு எது நன்மையோ அதனை செய்ய குழந்தைகள் நலக்குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டு குழந்தை திருமணம் பாலியல் துன்புறுத்தல்கள் காணாமல் போன / வீட்டை விட்டு சென்றகுழந்தைகள் பிச்சையெடுத்தல் குழந்தை தொழிலாளர் கைவிடப்பட்ட / ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்
2013 2 7 0 3 0 2
2014 9 0 0 0 0 0
2015 22 6 93 19 13 0
2016 15 10 40 3 9 5
2017 32 27 56 53 11 8
Total 80 50 189 78 33 15

இளைஞர் நீதிக்குழுமம்

குற்றம் புரிந்ததாக கருதப்படும் குழந்தைகளை சட்டரீதியாக கையாளுவது தனி கவனத்துடனும், அவர்களுக்குரிய உரிமைகளுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் இளைஞர் நீதிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டு பதியப்பட்ட வழக்குகள்
2013 93
2014 80
2015 106
2016 211
2017 214
Total 704