மூடுக

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

வருவாய் நிர்வாகம்
வ.எண் பிரிவு பெயர் பணிகளின் விவரம்
1 வருவாய்த்துறை அலுவலர்களின் பணியமைப்பு, அலுவலக நடைமுறைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பல
2 நில ஆக்கிரமிப்பு, குத்தகை, நில மாற்றம், நில ஒப்படை, நகர்ப்புற நில வரி, வசூல் தொகை மேல்முறையீடு, பட்டா மாறுதல் மேல்முறையீடு மற்றும் பல நிலத் தொடர்பாக – பொன்னேரி கோட்டம்
3 டி ஆவணம், கட்டிடங்கள் பதிவறை பராமரிப்பு, சுதந்திர போராளிகள் விவரங்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் சரிபார்ப்பு, வாரிசு சான்றிதழ் வருவாய் வசூல் சட்டம், மாவட்ட அரசிதழ் வெளியீடு, நூலகம் மற்றும் இதர பராமரிப்பு
4 எஃப் சிப்காட், மெட்ரோ வாட்டர் மாஸ்டர் பிளான்ட் காம்ப்ளக்ஸ், கிருஷ்ணா நீர், சென்னை நகர நீர்வழங்கல், TANPID, சி.எம்.டி.ஏ, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், MRL, Petrochem park, சிட்கோ, தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கான நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் நில மதிப்பை ஒத்திசைவு செய்தல்
5 எச் இலங்கை அகதிகள் முகாம் பராமரிப்பு
6 ஜே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலன்
7 எம் சட்டம் ஒழுங்கு, குண்டாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், படைக்கலச் சட்டம் மற்றும் திரையரங்குகள் தொடர்பானது
8 என் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட  நிலம் தொடர்பாக  மற்றும் கழிவு நில மேம்பாட்டுத் திட்டங்கள்
9 எஸ் குடிமை பொருட்கள் மற்றும் பொது வினியோக திட்டம் தொடர்பானவை
10 ட்டி ஓய்வூதியம், சம்பளம், ஊதிய நிர்ணயம் பட்ஜெட் மற்றம் இதர செலவுகள்
11 யூ இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை, உரிமை கோரப்படாத சொத்துக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தீ விபத்து, செய்தி பதிவு சட்டம், பிணை தரகர்கள் மற்றும் பணம் கடன் சட்டம், டி.என்.பி.எஸ்.சி மற்றும் பல
12 வி ஆயத் தீர்வை மற்றும் மதுபானம் தொடர்பானது
13 டபிள்யூ பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்
14 எக்ஸ் முக்கிய பிரமுகர்களின் வருகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத், திங்கள் தின கோரிக்கை மனுக்கள், மாண்புமிகு முதலமைச்சர் தனிப் பிரிவு மனுக்கள் மற்றும் பல
15 நில அளவை நில அளவை மற்றும் பதிவேடுகள் தொடர்பான
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வ.எண். அலுவலர் பதவி பணியின் விவரம்
1 திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
2 திட்ட அலுவலர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) மகளிர் திட்டம்
3 நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி
4 உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கிராம ஊராட்சிகள்
5 உதவி இயக்குனர் (தணிக்கை) தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு
6 நேர்முக உதவியாளர் (சத்துணவு) பள்ளி சத்துணவு திட்டம்

மாவட்ட நிர்வாக அலகுகள்

DAWorkflow_tam

வருவாய் நிர்வாக அமைப்பு

RAStructure_tam

பாராளுமன்ற தொகுதிகள் (1+3 பகுதி)

 1. திருவள்ளூர்
 2. சென்னை வடக்கு (பகுதி)
 3. ஸ்ரீபெரும்புதூர் (பகுதி)
 4. அரக்கோணம் (பகுதி)

சட்டமன்ற தொகுதிகள் (10)

 1. கும்மிடிப்பூண்டி
 2. பொன்னேரி
 3. திருத்தணி
 4. திருவள்ளூர்
 5. பூவிருந்தவல்லி
 6. ஆவடி
 7. மதுரவாயல்
 8. அம்பத்தூர்
 9. மாதவரம்
 10. திருவொற்றியூர்
வருவாய் கோட்டங்கள் (3)
வ.எண். கோட்டத்தின் பெயர் வட்டங்களின் எண்ணிக்கை
1 பொன்னேரி 2
2 திருவள்ளூர் 4
3 திருத்தணி 3

 

வருவாய் வட்டங்கள் (9) & வருவாய் கிராமங்கள் (792)
வருவாய் கோட்டத்தின் பெயர் வருவாய் வட்டத்தின் பெயர் உள்வட்டங்களின் எண்ணிக்கை வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
பொன்னேரி பொன்னேரி 8 200  (PDF 70 KB)
கும்மிடிப்பூண்டி 4 88  (PDF 58 KB)
திருவள்ளூர் திருவள்ளூர் 9 168  (PDF 74 KB)
பூவிருந்தவல்லி 4 48  (PDF 54 KB)
ஊத்துக்கோட்டை 5 100  (PDF 64 KB)
ஆவடி 5 31 (PDF 50 KB)
திருததணி திருததணி 6 87  (PDF 60 KB)
பள்ளிப்பட்டு 2 33  (PDF 98 KB)
ஆர்.கே. பேட்டை 3 37  (PDF 102 KB)

 

வட்டார ஊராட்சிகள் (14) & கிராம ஊராட்சிகள் (526)
வ.எண். வட்டார ஊராட்சியின் பெயர் கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை
1 எல்லாபுரம்  53  (PDF 58 KB)
2 கும்மிடிப்பூண்டி  61  (PDF 61 KB)
3 கடம்பத்தூர்  43  (PDF 43 KB)
4 மீஞ்சூர்  55  (PDF 55 KB)
5 பள்ளிப்பட்டு  33  (PDF 33 KB)
6 பூவிருந்தவல்லி  28  (PDF 28 KB)
7 பூண்டி  49  (PDF 49 KB)
8 புழல்  7  (PDF 45 KB)
9 ஆர்.கே. பேட்டை  38  (PDF 38 KB)
10 சோழவரம்  39  (PDF 39 KB)
11 திருவாலங்காடு  42  (PDF 42 KB)
12 திருத்தணி  27  (PDF 27 KB)
13 திருவள்ளூர்  38  (PDF 38 KB)
14 வில்லிவாக்கம்  13  (PDF 46 KB)

 

மாநகராட்சி (1) & வார்டுகள் (48)
வ.எண். மாநகராட்சியின் பெயர் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை
1 ஆவடி 48

 

நகராட்சிகள் (6) & வார்டுகள் (141)
வ.எண். நகராட்சியின் பெயர் நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை
1 பூவிருந்தவல்லி 21
2 திருவள்ளூர் 27
3 திருத்தணி 21
4 திருவேற்காடு 18
5 பொன்னேரி  27
6 திருநின்றவூர்  27

 

பேரூராட்சிகள் (8) & வார்டுகள் (129)
வ.எண். பேரூராட்சியின் பெயர் பேரூராட்சி வார்டுகளின் எண்ணிக்கை
1 ஆரணி  15
2 கும்மிடிப்பூண்டி  15
3 மீஞ்சூர்  18
4 நாராவாரிகுப்பம்  18
5 பொதட்டூர்பேட்டை  18
6 பள்ளிப்பட்டு  15
7 திருமழிசை  15
8 ஊத்துக்கோட்டை  15