மூடுக

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை

திருவள்ளுர் மாவட்டத்தில் 21559.8 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மா, தர்பூசணி, கீரை, கத்தரி, வெண்டை, மிளகாய், மல்லிகை மற்றும் இதர காய்கறிப் பயிர்கள் போன்றவை முக்கியமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தரமான நடவுப் பொருட்கள், வீரிய ரக ஒட்டு ரக விதைகள், ஒட்டு செடிகள், பதியன்கள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்வதே தோடக்கலைத்துறையின் முக்கிய குறிக்கோள் ஆகும். பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலைக்கூடாரம் முறையில் சாகுபடி செய்தல், நிரந்தர பந்தல் முறையில் கொடி வகைகள் சாகுபடி, சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களை பயிற்சி மூலமாகவும் விழிப்புணர்வு முகாம் மூலமாகவும் விவசாயிகளிடம் எடுத்துரைத்து தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரித்து அதன் மூலம் உற்பத்தி திறனை மும்மடங்காக அதிகரித்து வருமானத்தை இருமடங்கு பெருக்குவதே இத்துறையின் நோக்கம் ஆகும்.

அரசு தோட்டக்கலை பண்ணை :

திருவள்ளுர் மாவட்டத்தில் ஈக்காடு கண்டிகையில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இப்பண்ணையில் பப்பாளி பழ செடிகள், முருங்கை செடிகள் மற்றும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

1. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் (SHDS)

 •     பழ மரங்கள் சாகுபடியினை அதிகரிக்கும் பொருட்டு மா கொய்யா பப்பாளி செடிகள் 40 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது
 •     கத்தரி, மிளகாய் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ஏக்கருக்கு 6000 எண்ணிக்கையிலான குழித்தட்டு நாற்றுக்கள் இடுபொருட்களுடன் வழங்கப்படுகிறது.
 •     காய்கறி சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஏக்கருக்கு ரூ 4,000 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     நறுமணப்பயிர்கள் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு மஞ்சள் கிழங்கு மற்றும் இடுபொருட்கள் ஏக்கருக்கு ரூ 4,800 வீதம், கறிவேப்பிலை செடிகள் ஏக்கருக்கு ரூ 8000 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     மலர் பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு மல்லிகை,கனகாம்பரம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்வதற்கான செடிகள் ஏக்கருக்கு ரூ 6400 வீதம் மற்றும் சம்பங்கி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ 24000 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது
 •     மண்ணில்லா விவசாயம் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு அலகுக்கு 15 ஆயிரம் வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     செங்குத்து தோட்டம் அமைக்க ஒரு அலகுக்கு 15 ஆயிரம் வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தொகுப்பு ஒன்றுக்கு ரூ.450 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது..
 •     அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைக்க விடுதி ஒன்றுக்கு ரூ.8000 வீதம் 100 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     உயர் விளைச்சல் பெற துல்லிய பண்ணைத்திட்டம் ஏக்கருக்கு ரூ.6000 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     காளான் குடில் அமைத்து கூடுதல் வருமானம் ஈட்டுவதை ஊக்குவிக்க ஒரு அலகுக்கு ரூ.50000 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பயிர் ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ.8000 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
 •     தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.14000 வீதம் 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     வாழையில் ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.4000 வீதம் 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்களான
  •     நெகிழிக்கூடைகள் (ரூ.3570- 50%),
  •     அலுமினிய ஏணிகள் (ரூ.10000- 50%),
  •     பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக்கருவி (ரூ.250- 50%),
  •     மலர் அறுவடைக்கான முகப்பு விளக்குகள் (ரூ.250- 50%),
  •     நாப்ஸாக் ( பேட்டரி) தெளிப்பான் ( 8-12 லிட்டர்) (ரூ.3100- 50%),
  •     நாப்ஸாக் ( பேட்டரி) தெளிப்பான் ( 12-16 லிட்டர்) (ரூ.3800- 50%)

ஆகியற்றில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு ஏதேனும் ஒரு அலகு மட்டும் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது

2. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)

 •     நெற் பயிறுக்கு மாற்றாக வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் விதைகள் மற்றும் இடு பொருட்கள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     மா சாகுபடி செய்ய ஒட்டுச்செடிகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6120 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     தர்பூசணி,முலாம்பழம் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் விதைகள் மற்றும் இடு பொருட்கள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் விதைகள் மற்றும் இடு பொருட்கள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     வருடாந்திர மலர் சாகுபடியை ஊக்குவிக்க சாமந்தி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.16,000 வீதம் நாற்றுகள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     சம்பங்கி சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.60,000 வீதம் கிழங்கு மற்றும் இடு பொருட்களுக்கு 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     காய்ந்த மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 வீதம் நாற்றுகள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     கொய்யா சாகுபடி செய்ய பதியன்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.9202 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     வெங்காய சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் விதைகள் மற்றும் இடு பொருட்கள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     செடி முருங்கை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் செடிகள் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     பல்லாண்டு முருங்கை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     பாரம்பரிய காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 40 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     வேளாண்பல்கலைக்கழகத்தின் புதிய இரகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு பழச்செடிகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.18,000 வீதம் 60 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     வேளாண்பல்கலைக்கழகத்தின் புதிய இரகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு காய்கறி விதைகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 40 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     நிரந்தர பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு 50சதவிகிதம் பின்னேற்பு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
 •     காய்கறி பயிர்கள் தாங்கி வளர ஏதுவாக தடுக்கு அமைப்பு அமைக்க விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25000 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     தோட்டக்கலைப்பயிர்களில் களைச்செடிகளை கட்டுப்படுத்த களைப்பாய் அமைத்திட ச.மீ க்கு ரூ 21 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     இயற்கை முறையில் பூச்சிகளைக்கட்டுப்படுத்த சூரிய விளக்குப்பொறி அமைக்க விவசாயிகளுக்கு ஒரு அலகுக்கு ரூ. 4000 வீதம் 50 சதவிகித மானியம்,இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் ஒட்டு அட்டை பொறி அமைக்க ஒரு அலகுக்கு ரூ. 1200 வீதம் 30 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
 •     தோட்டக்கலைப்பயிர்களில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை / இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
 •     உயர் விளைச்சல் பெற துல்லிய பண்ணைத்திட்டம் செயல்படுத்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 15000 வீதம் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.

3 . பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நீர்ப் பாசனத் திட்டம் (PMKSY)

 •     நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை பயன் பெறலாம். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பக்கவாட்டு குழாய்களை புதுப்பிப்பதற்கான மானியத்தையும் பெறலாம்.
 •     சொட்டுநீர்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழி எடுப்பதற்கு ஆகும் செலவில் எக்டருக்கு ரூ.3000/- அதிகபட்சம் 2 எக்டர் வரை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

4. துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA)

 •     இத்திட்டமானது பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ்க்கண்டவாறு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

  1. குழாய் கிணறு/துளைக்கிணறு(50 சதவிகித மானியம்) ரூ.25000/- அலகு/நபர்
  2. டீசல் பம்ப்செட்/மின் மோட்டார் பம்ப்செட் (50 சதவிகித மானியம்) ரூ.15000/- அலகு/நபர்
  3. பாசனக்குழாய் (50 சதவிகித மானியம்) ரூ.10000/- நபர்
  4. தரைநிலை நீர்த்தேக்கத்தொட்டி (50 சதவிகித மானியம்) ரூ.40000/- நபர் (ரூ.350/க.மீ)

5. கலைஞரின்அனைத்துகிராமஒருங்கிணைந்தவேளாண்வளர்ச்சித்திட்டம்(KAVIADP)

 •     இத்திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் தரிசு நில மேம்பாடு, தோட்டக்கலை பரப்பு விரிவாக்கம், நுண்ணீர் பாசனத் திட்டம், தோட்டக்கலைதுறை திட்டங்கள் குழு அணுகு முறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
 •     உழவர் சந்தைக்கு தேவையான காய்கறிகள் உற்பத்தி செய்து தொய்வின்றி அனுப்பிட ஏதுவாக மாற்றுப்பயிராக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க எக்டர் ஒன்றுக்கு ரூ.7500/- வீதம் விதைகள் மற்றும் இடுபொருட்கள் 75 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க 8 வகையான காய்கறி விதைப் பாக்கெட்டுகள் ( கத்தரி, வெண்டை, தக்காளி, கீரைகள், அவரை, மிளகாய், கொத்தவரை, முருங்கை, சின்ன வெங்காயம், முள்ளங்கி மற்றும் பந்தல் காய்கறிகள்) அடங்கிய தளைகள் ரூ. 30/- வீதம் 75 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 5 வகையான பழச்செடிகள் ( கொய்யா (பதியன்), நெல்லி (ஒட்டு), சீதா (விதைக்கன்று), எலுமிச்சை ( விதைக்கன்று), பலா ( ஒட்டு) ) அடங்கிய தொகுப்பு ரூ.120/- வீதம் 75 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.

6. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)

 •     திருவள்ளுர் மாவட்டத்தில் வாழை,மிளகாய், கத்தரி மற்றும் வெண்டை பயிர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு (கரீப் மற்றும் ரபி பருவத்தில்) செய்து இயற்கை பேரழிவுகள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றிலிருந்து ஏற்படும் இழப்பிற்காக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

7. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் – (TNIAMP)

 •     தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் – தோட்டக்கலை (TNIAMP) என்பது உலக வங்கியால் நிதியளிக்கப்பட்ட மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். முன்மொழியப்பட்ட நகரியாறு (பள்ளிப்பட்டு, திருவாலங்காடு) நந்தியாறு (ஆர்.கே.பேட்டை , திருத்தணி) மற்றும் கும்மிடிப்பூண்டி துணைப் படுகைகளில் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் மற்றும் நீர் மேலாண்மை உறுதிப்படுத்தப்படுகிறது.
 •     நடப்பாண்டில் 97 எக்டர் பரப்பளவில் காய்கறிப் பயிர்கள் செயல்விளக்கம், 46 எக்டர் பரப்பளவில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு செயல்விளக்கம், நிலப்போர்வை, இயற்கை இடுபொருள் கிராமம் போன்ற இனங்கள் செயல்படுத்தப்படுகிறது.

8. மானாவாரி மேம்பாட்டு திட்டம் (NMSA-RAD)

 •     இத்திட்டமானது நடப்பாண்டில் திருவாலங்காடு வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. முதன்மை பயிராக தோட்டக்கலைப் பயிர் சாகுபடி(ஊடுபயிர்-வேளாண்மை பயிர்) செய்ய பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ.22500 மதிப்பிலான செடிகள்,விதைகள், இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
 •     ஒரு கறவை பசு கொள்முதல் செய்ய பின்னேற்பு மானியமாக ரூ.15000 வீதம் (50 சதவிகித மானியம்) வழங்கப்படுகிறது.
 •     ஐந்து ஆடுகள் கொள்முதல் செய்ய பின்னேற்பு மானியமாக ரூ.7500 (50 சதவிகித மானியம்) வழங்கப்படுகிறது.

9. தேசிய தோட்டக்கலை இயக்கம் ( NHM)

 •     திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தங்களின் விளைபொருட்களை அருகாமையில் உள்ள பகுதிகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக 100 எண்ணிக்கையிலான நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் 50 சதவீத மானியத்தில் ரூ 15,000 வீதம் வழங்கப்படுகிறது.
 •     தோட்டக்கலை விளை பொருட்களை அறுவடைக்கு பின் விற்பனை வரை பாதுகாக்கும் பொருட்டு முன்குளிரூட்டும்அலகு (Pre Cling unit), குளிர் பதன கிடங்கு (Cld Strage unit), சிப்பம் கட்டும் அறை (Pack house) போன்ற இனங்களுக்கு திட்ட அறிக்கையின் அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது

10. உழவர் சந்தைகள்

 •     திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம், அம்பத்தூர், திருத்தணி, திருவள்ளூர், நாரவாரிகுப்பம், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலமாக உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
 •     இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களான காய்கறிகள், பழங்கள்,பூக்கள் இயற்கை தயாரிப்பு வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகாவியா, இயற்கை பூச்சு விரட்டிகள் போன்ற இடுபொருட்களை இலவசமாக சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.
  • அனைத்து திட்டங்களிலும் பயனடைய தேர்வு செய்யும் தகுதிகள்:-

  •     சொந்த நிலம் மற்றும் நீர் ஆதாரம் உள்ள அனைத்து உழவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  •     நில ஆவணங்கள்- சிட்டா, அடங்கல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலவரைபடம்.
  •     சிறுமற்றும் குறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியர் கையொப்பம்) (நுண்ணீர் பாசனதிட்டத்தில் 100% மானியம் பெற மட்டும்)
  •     அங்கக பதிவு சான்றிதழ் ( இயற்கை விவசாய ஊக்கத்தொகை பெற மட்டும் )
  •     குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை பத்திரம் இருத்தல் வேண்டும்.
  •     மேலும் இணையவழி தொடர்புக்கு உழவன் செயலி மூலம் முன் பதிவு செய்யலாம்.
  • வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  •     மேலும் இணையவழி தொடர்புக்கு உழவன் செயலி மூலம் முன் பதிவு செய்யலாம்.
  • வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  •     https://tnhrticulture.tn.gov.in/என்ற இணையதளத்திலும் திட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
  •     https://www.tnhrticulture.tn.gov.in/tnhrtnet/ என்ற முகவரியில் விவசாயிகள் தங்களது விண்ணப்பத்தினை தாமாகவோ அல்லது வட்டார அலுவலர் உதவியுடன் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தோட்டக்கலை துணை இயக்குநர்,

திருவள்ளூர்


தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள்
தோட்டக்கலை துணை இயக்குநர் : திருமதி.ஐ.ஜெபக்குமாரி அனி 9994094030
மின்னஞ்சல் முகவரி : dd.dohpc.tvl@tn.gov.in & ddhthiruvallur@yahoo.com
தோட்டக்கலை உதவி இயக்குநர்
(நடவு பொருள்)
செல்வி.R.ஐஸ்வர்யா 7010288845
தோட்டக்கலை அலுவலர்
(தொ.நு.மத்திய திட்டம்)
திருமதி.ப.இந்துமதி 7845823940
தோட்டக்கலை அலுவலர்
(தொ.நு.மாநில திட்டம்)
திருமதி.வி.சோபனா 9942659155
வ. எண். வட்டாரத்தின் பெயர் தோட்டக்கலை உதவி இயக்குநர்களின் பெயர் (திரு/திருமதி/செல்வி) தொடர்பு எண். தோட்டக்கலை அலுவலர்களின் பெயர் தொடர்பு எண்.
1. ஆர்.கே.பேட்டை P.மணிகண்டன் 8870739991 M.ஜெகதீஸ்வரி 8838767797
2. பள்ளிப்பட்டு P.மணிகண்டன் (பொ) 8870739991 M.K.நாராயணசாமி 9442943312
3. திருத்தணி C.கோமதி 7904684006 A.K.அண்ணாதுரை 8778998342
4. திருவாலங்காடு N.சரத்குமார் 9282413438 M.பிரேமலதா 9677800942
5. திருவள்ளூர் C.கோமதி (பொ) 7904684006 M.ஜெகதீஸ்வரி (பொ) 8838767797
6. எல்லாபுரம் D.பூர்ணிமா 9790171116 A.சாதனா 8778651947
7. கடம்பத்தூர் D.பூர்ணிமா (பொ) 9790171116 K.நாகராஜன் 8939224681
8. பூண்டி N.சரத்குமார் (பொ) 9282413438 M.பிரேமலதா (பொ) 9677800942
9. பூவிருந்தவல்லி K.ஷீலாதேவி 8825748432 P.மார்க்ஸ்மதி 9578668649
10. அம்பத்தூர் K.ஷீலாதேவி (பொ) 9282413438 P.மார்க்ஸ்மதி (பொ) 9578668649
11. புழல் T.திவ்யா (பொ) 9566272112 T.திவ்யா (பொ) 9566272112
12. சோழவரம் S.சாந்தினி (பொ) 9444688080 A.சாதனா (பொ) 8778651947
13. கும்மிடிப்பூண்டி T.திவ்யா (பொ) 9566272112 T.திவ்யா 9566272112
14. மீஞ்சூர் S.சாந்தினி (பொ) 9444688080 C.சுரேஷ் 9840716473
15. அரசு தோட்டக்கலைப் பண்ணை, ஈக்காடு கண்டிகை C.கோமதி (பொ) 7904684006 S.இந்துபிரியா 8903615722