மூடுக

சத்துணவுத் திட்டம்

புரட்சித் தலவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம்

புரட்சித் தலவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெரும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு மதிய
உணவு வழங்குதல்.

நோக்கம்

பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்குதல், அவர்களின் கல்வித்த்றனுக்குரிய ஊட்டச்சத்தூணவு வழங்குதல்

நிதியாதாரம்

மத்திய அரசு (60%) மற்றும் மாநில அரசின் (40%) நிதி ஆதாரங்களின் அடிப்படையில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலக்கு, சாதனை மற்றும் நிலுவை பணிகள்

  • 2017-18 ஆம் ஆண்டில் 1,47,285 மாணவர்கள் பயன்பெற்றூ வருகின்றனர். மேலும் வருடங்தோறும் செங்கல் சூளை மணியாளர்களின் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நலன் கருதி அவைர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
  • 2017-18 ஆம் ஆண்டில் செங்கல் சூளை பணியாளர்களின் பள்ளியில் பயிலும் 2769 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்ப்ட்டு வருகிறது.
  • சத்துணவு மையத்தின் வரவு / செலவின விவரங்களை இணயதளம் மூலமாக ப்திவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2017-18 ஆம் ஆண்டிலிருந்து குறுஞ்செய்தி சேவை கண்காணிப்பு அமைப்பு மூலம் திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது
  • 2017-18 ஆம் ஆண்டில் விவசாயமில்லா தோட்டக்கலை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் மூலம் சத்துணவு மையங்களில் முருங்கை 1523 மற்றும் பப்பாளி 1523 செடிகள் நடுவதற்கு தோட்டக்கலை துறையின் மூலம் செடிகள் பெறப்பட்டு சத்துணவு மையங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் சத்துணவு மையங்களுக்கு 707 பிரஷ்ர் குக்கர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • 2017-18 ஆம் ஆண்டில் சத்துணவு மையங்களுக்கு 423 புதிய சமையல் பாத்திரங்கள் வழங்கிட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு அரசின் முக்கிய திட்ட செயல்பாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் சத்துணவு திட்டம் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வாரத்தில் 5 வேலை நாட்களிலும் முட்டையுடன் கூடிய 13 வகையான கவலை சாத்ம் வழங்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் 01/07/1982 முதல் பின்வரும் குறிக்கோள்களை அடையும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் 1523 சத்துணவு மையங்களில் 144081 சத்துணவு பயனாளர்களுக்கு மற்றும் செங்கல் சூளையில் பணிபுரியும் பணியாளர்களின் 2769 பள்ளி பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது

உணவு வகைகள்

  • பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்குதல், அவர்களின் கல்வித்திறனுக்குறிய ஊட்டச்சத்துணவு வழங்குதல்.
  • பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து தரமான கல்வி வழங்குதல்
  • மாணவர்களின் உடல் நலனை பேணுதல்
  • மாணவர்களிடையே நல்ல பழக்கவழக்கம் மற்றும் நற்செயல்களை வளர்த்தல்
  • இத்திட்டம் 6 முதல் 10 வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு 15/09/1984 முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    1. திங்கள் முதல் வெள்ளி வரை வேகவைத்த முட்டையுடன் கூடிய மதிய உணவு
    2. செவ்வாய்க்கிழமை தோறும் கொண்டைக்கடலை / பச்சைபயிறு 20 கிராம் (ஒவ்வொரு மாணவருக்கும்)
    3. வெள்ளிக்கிழமை தோறும் வேகவைத்த உருளைக்கிழங்கு 20 கிராம் (ஒவ்வொரு மாணவருக்கும்)
    4. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
  • பெருந்தலைவர் காமராசர், பேரறிஞ்ர் அண்ணா ஆகியோரது பிறந்தநாளின் போது சர்க்கரை பொங்கல் சிறப்பு உணவாக வழங்கப்ப்டுகிறது
சத்துணவு மையங்களின் விவரம்
வ.எண் விவரம் மையங்களின் எண்ணிக்கை உணவு உண்போரின் எண்ணிக்கை
1 ஊராட்சி ஒன்றியம் 1498 139560
2 நகராட்சி 25 4521
மொத்தம் 1523 144081

 

மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அளவு விகிதம் (கிராமில்)
வ.எண் வகுப்பு விவரம் அரிசி அளவு பருப்பு அளவு எண்ணெய் அளவு
1 1-5ம் வகுப்பு வரையில் 100 15 3
2 6-10ம் வகுப்பு வரையில் 150 15 3

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு திட்டம்

தேசிய மதிப்பு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களுக்கு பதிவேடுகள் தட்டு மற்றும் டம்ளர், மேசை மற்றும் நாற்காலி, பாய்
மற்றும் சோப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களின் விரிவான விவரம்
வ.எண் பள்ளியின் விவரம் மையங்களின் எண்ணிக்கை மொத்த பள்ளியின் பதிவு மொத்தம் உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை
1 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 793 41332 37593
2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 253 36641 32203
3 அரசு உயர்நிலைப்பள்ளி 148 36523 26474
4 அரசு மேல்நிலைப்பள்ளி 79 39467 21442
5 ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி 39 2226 1974
6 ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி 11 869 775
7 ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி 6 1069 920
8 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி 5 1410 1075
9 அரசு நிதி பெரும் துவக்கப்பள்ளி 123 10489 8557
10 அரசு நிதி பெரும் நடுநிலைப்பள்ளி 33 7617 5436
11 அரசு நிதி பெரும் உயர்நிலைப்பள்ளி 12 7448 3237
12 அரசு நிதி பெரும் மேல்நிலைப்பள்ளி 21 17588 4395
மொத்தம் 1523 202679 144081
செங்கல் சூளையில் பணிபுரியும் பணியாளர்களின் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2679
மொத்தம் 146850