மூடுக

திட்டங்கள்

Filter Scheme category wise

வடிகட்டு

அம்மா உடற்பயிற்சி கூடம்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள் ஊரக பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்களது…

வெளியிடப்பட்ட தேதி: 30/06/2018
விவரங்களைப் பார்க்க

அம்மா பூங்கா

ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும்…

வெளியிடப்பட்ட தேதி: 30/06/2018
விவரங்களைப் பார்க்க

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நன்மைகள் அலகு தொகை – ரூ.2.10 இலட்சம் ஒரு வீட்டிற்கு –…

வெளியிடப்பட்ட தேதி: 30/06/2018
விவரங்களைப் பார்க்க

தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

நோக்கம் கிராம ஊராட்சிகளில் மண் சாலைகளைத் தார் சாலைகளாக மேம்படுத்தவும், சேதமடைந்த தார் சாலைகளை வலுபடுத்தவும் மற்றும் சிறு பழுதடைந்த தார்ச் சாலைகளை புதுப்பித்து பராமரிக்க பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 2015-16 –ஆம் ஆண்டில் முதல் முறையாக, “தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டது. பின்னர் 2016-17 ஆம் ஆண்டு மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளிலும் இத்திட்டம் தொடரப்படுகிறது. இத்திட்டம் கீழ்கண்ட 3 வகைப்பாடுகளாக செயல்படுத்தப்படுகிறது வகைப்பாடு – 1 மண் சாலைகளைத் தார்ச் சாலைகளாக மேம்படுத்துதல், ஒன்றிய மற்றும் ஊராட்சிகளிலுள்ள மண் செம்மண் மற்றும் கப்பி சாலைகளை தரம் உயர்த்துதல் வேண்டும். வகைப்பாடு -…

வெளியிடப்பட்ட தேதி: 14/05/2018
விவரங்களைப் பார்க்க

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

கிராம்ங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக – தாய் 2011 – 12 முதல் 2015 – 16 வரை 526 ஊராட்சிகளை சேர்ந்த 3861 குக்கிராமங்களில் ரூ. 3680.00 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டது தாய் – II 2016-17 இரண்டாம் கட்டமாக அரசாணை எண் 129 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (SGS-1) நாள் 25.10.2016-ன் படி, தாய் – II 2016-17-ன் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் சிறுபாசன ஏரிகளை…

வெளியிடப்பட்ட தேதி: 14/05/2018
விவரங்களைப் பார்க்க

தூய்மை பாரத இயக்கம் (கிராமம்)

தனிநபர் இல்லக் கழிவறை கட்டுதல் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும், கழிவறை கட்டி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை உருவாக்குதல் மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் 29.08.2016 அன்று முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற குறிக்கோளை அடைய அறிவிப்பு செய்துள்ளார். முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற இலக்கினை அடைய மாநில அரசு பல்வேறு முன் முயற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற…

வெளியிடப்பட்ட தேதி: 14/05/2018
விவரங்களைப் பார்க்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

நோக்கங்கள் இத்திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அக்குடும்பத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த இத்திட்டத்தில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டதில் 2008 – 09 ஆண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலையான சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகிறது. வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவைகளை தடுத்திட ஏதுவாக இயற்கை வளங்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி அடைதல். ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது. ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தப்படுகிறது மாற்றுதிறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிற்து. ஊரட்சி நிர்வாகத்தால் வேலை…

வெளியிடப்பட்ட தேதி: 14/05/2018
விவரங்களைப் பார்க்க