திட்டங்கள்
Filter Scheme category wise
தூய்மை பாரத இயக்கம் (கிராமம்)
தனிநபர் இல்லக் கழிவறை கட்டுதல் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும், கழிவறை கட்டி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளை உருவாக்குதல் மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் 29.08.2016 அன்று முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற குறிக்கோளை அடைய அறிவிப்பு செய்துள்ளார். முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம் என்ற இலக்கினை அடைய மாநில அரசு பல்வேறு முன் முயற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
நோக்கங்கள் இத்திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அக்குடும்பத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த இத்திட்டத்தில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டதில் 2008 – 09 ஆண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலையான சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகிறது. வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவைகளை தடுத்திட ஏதுவாக இயற்கை வளங்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி அடைதல். ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது. ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தப்படுகிறது மாற்றுதிறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிற்து. ஊரட்சி நிர்வாகத்தால் வேலை…