மூடுக

தேவி கருமாரி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு

வழிகாட்டுதல்

சூரியனுக்கு அருளிய அம்பிகை

தேவி கருமாரி அம்மன் நிகழ்த்தியுள்ள பல்வேறு திருவிளையாடல்களில், சூரியனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாள், அம்பிகை குறி சொல்லும் நாடோடிப் பெண்ணின் உருவத்தை எடுத்து, சூரியனிடம் சென்று, அவனின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதாகச் சொன்னார். ஆனால், தன் எதிரே வந்திருப்பது, தேவி கருமாரி அம்மன் தான் என்பதை உணராத சூரியன், அம்பிகையை உதாசீனப்படுத்தினான். கோபமடைந்த அம்மனும், சூரியனை சபிக்க, அவன் தன் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினான். மேலும், தேவியின் சாபத்தால், அவனின் பெருமையும் குன்றியது.

தனது தவறை உணர்ந்து திருந்திய சூரியனும், அம்பிகயை மனமுருகப் பிரார்த்தித்து, தன்னை மன்னித்தருளும்படி வேண்டிக் கொண்டான். தேவி கருமாரி அம்மனும், சூரியனின் பிரார்த்தனையால் மனம் குளிர்ந்து, அவனை மன்னித்தருளினார். மேலும், சூரியன் பிரார்த்தித்துக் கொண்டபடி, ஞாயிற்றுக் கிழமையை தனக்கு மிகவும் உகந்த நாளாக ஆக்கிக் கொள்வதாகவும், வருடத்திற்கு இரு முறை, அதாவது, புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாகத் தன் தலையின் மீது படவும் வரமளித்தார்.

இதன் காரணமாகவே, ஞாயிற்றுக் கிழமை அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துள்ளது. மேலும், வருடந்தோறும், புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாக அம்பிகையின் தலையின் மீது படுவதை நாம் கண்டு களிக்க முடிகிறது.

தமையனைத் தன்னுடன் எழுந்தருளச் செய்தல்

முன்னொரு காலத்தில், வைகுண்டத்தில் வாசம் செய்யும், திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வருகை புரிந்தார். தமையனின் வருகையால் மனமகிழ்ந்த அம்பிகை, அவரைத் தனது அருகிலேயே, தெற்குத் திசை
நோக்கி நின்றபடியே, திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், நவக்கிரகங்களை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். தமையனும், அப்படியே செய்வதாக, அம்பிகைக்கு வாக்களித்தார்.

திருமாலும், தங்கைக்கு வாக்களித்தப்படியே, திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். அவ்வாறே, திருவேற்காட்டில் அம்பிகையையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்த வேத வியாச முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புகைப்படத் தொகுப்பு

  • தேவி கருமாரி அம்மன்
  • தேவி கருமாரி அம்மன் கோவில் நுழைவு வாயில்
  • தேவி கருமாரி அம்மன் கோயில்

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

அருகாமையில் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையம் உள்ளது

சாலை வழியாக

இங்கு வர அடிககடி பேருந்துகள் உள்ளன.