செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

புகையில்லா போகி பண்டிகை – 2026.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் புகையில்லா போகி பண்டிகை 2026 புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் – தகவல். (PDF 35KB)

Special Intensive Revision of the Electoral Roll - 2026

ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளார்/வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளார்/வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.ராமன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, நகராட்சி மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள உதவி மையங்களை நேரில் ஆய்வு செய்தார். (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

சர்வதேச ஜவுளி உச்சி மாநாடு-360.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 43KB)

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு விழா – இது எங்கள் விளையாட்டு – 2026 போட்டிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக முதலைமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் – 2026 போட்டிகளுக்கான இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட அனைத்து விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அழைப்பு. (PDF 49KB)

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள், “உலகம் உங்கள் கைகளில்” திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

திருவள்ளுர் மாவட்டம் இந்து கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 2034 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 47KB)

Cooperative Pongal gift package.

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், வேப்பம்பட்டு கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை ஆகியவற்றை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், […]

படங்கள் ஏதும்  இல்லை

குறள்வாரம் நிகழ்ச்சியில் ஆர்வமுடைய பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

குறள்வாரம் நிகழ்ச்சியில் ஆர்வமுடைய பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சியர். (PDF 32KB)

படங்கள் ஏதும்  இல்லை

இலவச பேருந்து பயணச் சீட்டுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயணச் சலுகைக்கு எந்த சிரமமும் இன்றி எளிதாக ஆன்லைனில் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. (PDF 36KB)

“உலகம் உங்கள் கையில்” திட்டம் – 07.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், உலக நாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 1464 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 40KB)

படங்கள் ஏதும்  இல்லை

குறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 – தமிழ் வளர்ச்சித்துறை.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026

குறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 – தமிழ் வளர்ச்சித்துறை. (PDF 36KB)