மாவட்டம் பற்றி
திருவள்ளூர் வரலாறு
திருவள்ளூர் வீரராகவ கோவிலில், “விஷ்ணு” என்ற புனித இறைவனின் தூக்க நிலையை குறிப்பிடுகின்ற வகையில் திருவல்லூரு என்ற பெயரில் திருவள்ளூர் முதலில் அறியப்பட்டது. பின்னர் மக்கள் திரிவல்லூர் மற்றும் திருவள்ளூர் போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டனர். இங்கு வீரராகவ கோவில் இருப்பதால் இன்று திருவள்ளூர் நன்கு அறியப்படுகிறது. அமாவாசை தினம் ஆண்டவருக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமான நாளாகும், அதனால் மக்கள் அந்த நாளை புனிதமான நாளாக கருதி இறைவனை தரிசிக்க வருகிறார்கள்.
மாவட்ட வரலாறு
திருவள்ளூர் மாவட்டம், முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர் / காஞ்சிபுரம் என மறுபெயரிடப்பட்டது) இருந்து பிரிக்கப்பட்டது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி மற்றும் கும்மிடிபூண்டி உள்ளிட்ட வட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்பொழுது இந்த மாவட்டத்தில் அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, திருத்தனி, பள்ளிப்பட்டு, மாதவரம், மதுரவாயல், திருவெற்றியூர் மற்றும் ஆவடி ஆகிய 12 வட்டங்கள் உள்ளன்.
இந்த பகுதி, 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆளுமையில் இருந்தது அதன் பின் ஆற்காடு நவாப்பின் ஆளுமைக்கு வந்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1687 ஆம் ஆண்டில், முகலாயர்களால் கோல்கொண்ட ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் இந்த பிராந்தியம் டெல்லியின் முகலாய பேரரசர்களின் கீழ் வந்தது. இந்த பிராந்தியத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் கர்நாடகப் போர்கள் நடந்த காட்சிகளை காண முடிகிறது. இந்த பிராந்தியத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுகாரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்ததாக கூறப்படுகிறது. 1609 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழவேற்காடு நகரம் டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின் 1825 ஆம் ஆண்டில் பிரிட்ஷார் இந்த நகரத்தை தங்கள் வசம் ஆக்கிக்கொண்டனர்.