முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 12.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கிவைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள், இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்.(PDF 65KB)