அடைவது எப்படி
திருவள்ளூர் வந்து சேரும் பயண வழி:
வான்வழி : சென்னை திரிசூலத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் மற்றும் காமராஜர் உளநாட்டு விமான நிலையத்திலிருந்து திருவள்ளூர் 47 கி.மீ. தொலைவில் உள்ளது.
இரயில் வழி : திருவள்ளூர் இரயில் நிலையம், சேலம், ஈரோடு, பெங்களூரு, மங்களூர், புனே மற்றும் மும்பை செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும், இங்கிருந்து திருவலாங்காடு, திருத்தணி, திருப்பதி, மந்த்ராலயம் மற்றும் ஷிர்டி போன்ற புனித இடங்களுக்கு செல்லலாம். கூடுதலாக, சென்னை சென்ட்ரல், அரக்கோணம் மற்றும் திருத்தனிக்கு செல்ல EMU சேவைகள் காலை முதல் நள்ளிரவு வரையில் உள்ளது.
சாலை வழி : மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் (NH 16, NH 48 மற்றும் NH 716) மாவட்ட எல்லையை கடந்து செல்கின்றன. பேருந்து நிலையம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து காலை முதல் நள்ளிரவு வரை வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.