மூடுக

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

வீரராகவர் பெருமாள் கோயில், திருவள்ளூர்

ஏப்ரல் முதல் மே வரை (சித்திரை தமிழ் மாதம்) 10 நாட்கள் சித்ரா பொளர்ணமி நாளில் தீர்த்தவாரி பிரம்மோற்ஸவம் நடை பெரும்.

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயில், திருத்தனி

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை திருவிழா (ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில்) மூன்று நாட்கள் நடக்கும், ஆண்டுதோரும் இத்திருவிழாவுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் பூ காவடி எடுத்து வரும் போது “ஹரோ ஹரா!” என்று சொல்லி கொண்டு நீண்ட வரிசையில் நடனமாடிக்கொண்டு வரும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்

படி உற்சவம்

பழைய (கிரிகோரியன்) ஆண்டு முடிந்து புது வருடம் (அதாவது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு) பிறக்கும் போது, ஆண்டுதோரும் லட்சக்கணக்கான  பக்தர்கள் தங்கள் இறைவனை தரிசிக்க புனிதமான இத்தணிக்கை மலைக்கு வருகிறார்கள்.

ஸ்ரீவர்த்தேஷ்வர் கோயில், திருவாலங்காடு

தமிழ் மாத மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) திருவாதிரை இந்த கோவிலின் மிக முக்கியமான விழாவாகும். சிவபெருமானைச் சார்ந்த மற்ற எல்லா திருவிழாக்களும் இந்த கோவிலில் நடைபெரும்