மூடுக

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முட நீக்கியல் அலகு, ஆரம்ப நிலையிலேயே காது கேளாமைத் தன்மையை கண்டறியும் மையம் மற்றும் தசைப் பயிற்சி நிபுணர் அலகு செயல்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்கள், நிதி உதவி, விலையில்லா சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், மன வளர்ச்சி குன்றியோர்க்கான இல்லங்களுக்கு உதவி வழங்குதல், ஆரம்ப நிலையிலேயே மன வளர்ச்சி குன்றுதல் மற்றும் காது கேளாமை அறிகுறிகளை கண்டறிந்து சரி செய்வதற்கான சிகிச்சை மேற்கொள்ளுதல், அரசு பார்வையற்றோர் பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவிகளுக்கான நலத் திட்டங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இவ்வலுவலகத்தின் மூலம் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களின் விவரம் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   (PDF 4.5 MB)

மறுவாழ்வு குழு

DDRO Flowchart