நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை
திருவள்ளூர் மாவட்ட நில அளவை அலகில், தேசிய நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிலவள துறையின் நிதி பங்களிப்புடன் நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்கல் தொடர்பாக பின் வரும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- ஊரக பகுதி நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்குதல்
- நகரப் பகுதிகளின் நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்குதல்
- புல அளவு வரைபடங்கள் மின்ணனுமயமாக்குதல்
- நத்தம் நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்குதல்
- நில ஆவண மேலாண்மை மையம் உருவாக்குதல்
- குறூ வட்ட அளவர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்டுதல்
- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அளவு செய்து நில உரிமை விபரங்களை பதிவு செய்தல் – தொடர் இயக்க பார்வை கட்டுப்பாட்டு நிலையம் நிறுவுதல்.
ஊரக பகுதி நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்குதல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் ஊரக பகுதி நிலப் பதிவேடுகள் (அ பதிவேடு மற்றும் சிட்டா) விவரங்கள் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு நில உரிமை பதிவு மாறுதல் பணிகள் இணையவழி முலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முலம் இம்மாவட்டத்தில் நாளது வரையில் 147037 மனுக்கள் (உட்பிரிவு இனத்தில் 90106 மனுக்கள் மற்றும் உட்பிரிவு அல்லாதவை 56931 மனுக்கள்) நடவடிக்கை எடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளன.
நகரப் பகுதி நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்குதல்
இம்மாவட்டத்தில் நகர நில அளவை ஆவணங்கள் பயன்பாட்டில் இருந்து வரும் 6 நகராட்சிகளிலும் ( அம்பத்தூர், ஆவடி, மாதவரம், திருவள்ளூர், திடுவெற்றியூர் மற்றும் கத்திவாக்கம்) நகர அளவை நிலப் பதிவேடுகளின் பதிவுகள் கணினிமயமாக்கப்பட்டு அவற்றில் அம்பத்தூர், ஆவடி, மாதவரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 நகராட்சிகளின் நில ஆவணங்கள் இணையவழி பயண்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டு நில உரிமை பதிவு மாறுதல்கள் இணையவழி முலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள திருவெற்றியூர் மற்றும் கத்திவாக்கம் நகராட்சிகளின் நில ஆவணங்களின் கணினி பதிவுகள் சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விரு நகராட்சிகளின் நில ஆவணங்களும் வ்ரைவில் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
புல அளவு வரைபடங்கள் மின்ணனுமயமாக்கல்
இம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 ஊரக வருவாய் வட்டங்களில் உள்ளடங்கிய 2,16,382 புல வரைபடங்களில் இதுவரை 2,13,523 புல வரைபடங்கள் மின்ணனுமயமாக்கப்பட்டு “கொலாப் லேண்டு” எனப்படும் மென்பொருள் முலம் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை பயன்படித்தி பொது மக்கள், அவர்களூக்கு சொந்தமான நிலங்களின் புல அளவு வரைபடங்களை பார்வையிட்டு நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியேற்படுத்தப்பட்டுள்ளன.
நத்தம் நில அளவை நில ஆவணங்கள் கணினிமயமாக்கல்
இம் மாவட்டத்தில் உள்ள 11 ஊரக வருவாய் வட்டங்களிலும் 3,78,531 நிலப் பதிவுகள் கணினிமயமாக்கப்ப்ட்டு கணினி பதிவுகள் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் கும்மிடிப்பூண்டி வட்ட நத்தம் நில அளவை ஆவணங்கள் முன்மாதிரி வட்டமாக தேர்வு செய்யப்பட்டு இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும், நத்தம் நில அளவை மேற்கொள்ளப்ப்டாமல் இருந்த
ஒருங்கிணைந்த அம்பத்தூர் வட்டத்தில் அடங்கிய 57 கிராமங்களில் நத்தம் நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டு நத்தம் நிலவைத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
தேசிய நில ஆவண மேலாண்மை மையம் உருவாக்குதல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஊரக வருவாய் வட்டங்களில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தனி, பள்ளிப்பட்டு மற்றும் அம்பத்தூர் ஆகிய 5 வருவாய் வட்டங்களில் தலா ரூ. 10.0 இலட்சம் மதிப்பீட்டில் நில ஆவண மேலாண்மை மையம் அணைத்து வசதிகளுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மிதமுள்ள 6 வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறுவட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் உருவாக்குதல்
2015 – 16 ஆம் நிதியாண்டில் இம்மாவட்டத்தில் 3 குறு வட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் தலா ரூ. 12.71 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் நடப்பு நிதியாண்டில் இரு குறுவட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைக்க தலா ரூ. 15.36 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
தொடர் இயக்கப் பார்வை கட்டுப்பாட்டு மையம்
நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மில்லிமீட்டர் துல்லியமாக அளவுப் பணி மேற்கொள்ள டிஜிட்டல் புவி அமைப்பு நிலை கருவி பயன்படுத்தி நில அளவைப் பணிகளை மேற்கொள்ளும் முறை செயல்படுத்தப்பட்டு அப்பணியின் பயன்பாட்டிற்கென தமிழகம் முழுவதும் அமையவுள்ள 70 தொடர் இயக்கப் பார்வை கட்டுப்பாட்டு மையங்களில் 3 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் இடம் தேர்வு செய்யப்பட்டு தொடர் இயக்கப் பார்வை கட்டுப்பாட்டு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருத்தனி நகராட்சியில் நகர நில அளவைப் பணி 01-12-2017 முதல் துவக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.