மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், வேப்பம்பட்டு கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை ஆகியவற்றை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 48KB)

