மூடுக

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

தேதி : 02/12/2011 - | துறை: ஊரக வளர்ச்சி
அம்மா பூங்கா திறப்பு விழா

கிராம்ங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக – தாய் 2011 – 12 முதல் 2015 – 16 வரை 526 ஊராட்சிகளை சேர்ந்த 3861 குக்கிராமங்களில் ரூ. 3680.00 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டது

தாய் – II 2016-17

இரண்டாம் கட்டமாக அரசாணை எண் 129 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (SGS-1) நாள் 25.10.2016-ன் படி, தாய் – II 2016-17-ன் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் சிறுபாசன ஏரிகளை மேம்படுத்துதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்துதல் மற்றும் சாலை வசதிகள் எற்படுத்துதல் ஆகிய பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறுபாசன ஏரிகளை மேம்பாடு செய்தல்

தாய் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறுபாசன ஏரிகள் விரிவான முறையில் புனரமைப்பு செய்யப்படும். இந்த ஏரிகளில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, இயந்திரங்களின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, மதகு மற்றும் கலங்கல்கள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப் படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாட்டினை களையவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழு கொள்ளளவினை மீட்கவும், குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைபடுத்தவும் வழிவகை ஏற்படும். இதனால், ஏரிகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். ஊரக பகுதிகளில் விவசாய பரப்பளவு அதிகரிக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.1344.930 இலட்சம் மதிப்பீட்டில் 60 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், ரூ.1108.900 இலட்சம் மதிப்பீட்டில், 45 சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முடிவடைந்த வடகிழக்கு பருவமழையின் போது, 2017க்கு முன்னதாக மேம்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட சிறுபாசன ஏரிகளில், தண்ணீர் நிரம்பியதோடு, நிலத்தடி நீர் மட்டமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்

ஊரக பகுதிகளில் தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரவும், 40 முதல் 55 Lpcd அளவு குடிநீர் ஒவ்வொருவருக்கும் வழங்கும் நோக்கிலும், குடிநீர் பற்றாக்குறையுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய குடிநீர் வசதிகள் ஏற்படுத்திதரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 35 பணிகள் ரூ. 101.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவதைந்து, குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் புதிதாக மயான வசதி ஏற்படுத்தித் தரும் பொருட்டு 136 சாலை பணிகள் மற்றும் 29 தெருவிளக்குகள் அமைக்கும் பணி ரூ.492.91 இலட்சத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 163 பணிகள் ரூ.463.56 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

21 மயான மேம்பாடு பணிகள் அமைக்க ரூ.78.89 இலட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 16 பணிகள் ரூ.59.17 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு பணி நடைபெற்று வருகிறது.

சாலை வசதிகள் ஏற்படுத்துதல்

ஒரு ஊராட்சியில் அமைந்துள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குக்கிராமங்களை இணைக்கும் வகைகளில் சாலை வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கிலும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்காடிகள் ஆகியவற்றை சென்றடைய கூடிய வகையிலும், சாலைகள் கண்டறியப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 48 சிறப்பு சாலை பணிகள் ரூ.1345.00 இலட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அதில் 40 சாலை பணிகள் முடிக்கப்பட்டு ரு.1123.42 இலட்சம் மதிப்பீட்டில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைப்பெற்று வருகிறது.

அம்மா பூங்கா - சிறுவர் விளையாட்டுத் திடல்

அம்மா பூங்கா 2016-17

அரசாணை எண்.132 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (SGS-I) நாள்:02.11.2016 –ன்படி, கிராமங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுது போக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத் தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

2016-17 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், எல்லாபுரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.980.000 இலட்சம் மதிப்பீட்டில் 49 அம்மா பூங்காக்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, மேற்படி பணிகளில் ரூ.100.000 இலட்சம் மதிப்பீட்டில் 5 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்மா உடற்பயிற்சி கூடம்

அம்மா உடற்பயிற்சி கூடம் 2016-17

ஊரக பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் மன நலம் மற்றும் உடல் நலனை மேம்படுத்திக்கொள்ளவும், அவர் தம் திறனாற்றலை வளர்த்துக்கொள்ளவும், அரசாணை எண்.133, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (RR-III) நாள்:03.11.2016 –ன்படி, அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

2016-17 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், எல்லாபுரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.490.000 இலட்சம் மதிப்பீட்டில் 49 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேற்படி பணிகளில் ரூ.50.000 இலட்சம் மதிப்பீட்டில் 5 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.