மூடுக

தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

தேதி : 24/05/2015 - | துறை: ஊரக வளர்ச்சி

நோக்கம்

கிராம ஊராட்சிகளில் மண் சாலைகளைத் தார் சாலைகளாக மேம்படுத்தவும், சேதமடைந்த தார் சாலைகளை வலுபடுத்தவும் மற்றும் சிறு பழுதடைந்த தார்ச் சாலைகளை புதுப்பித்து பராமரிக்க பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 2015-16 –ஆம் ஆண்டில் முதல் முறையாக, “தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டது. பின்னர் 2016-17 ஆம் ஆண்டு மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளிலும் இத்திட்டம் தொடரப்படுகிறது.

இத்திட்டம் கீழ்கண்ட 3 வகைப்பாடுகளாக செயல்படுத்தப்படுகிறது

வகைப்பாடு – 1

மண் சாலைகளைத் தார்ச் சாலைகளாக மேம்படுத்துதல், ஒன்றிய மற்றும் ஊராட்சிகளிலுள்ள மண் செம்மண் மற்றும் கப்பி சாலைகளை தரம் உயர்த்துதல் வேண்டும்.

வகைப்பாடு – 2

சேதமடைந்த தார்ச் சாலைகளை வலுப்படுத்துதல், சேதமடைந்த தார்ச் சாலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கப்பி அடுக்குகள் அமைத்து அதன் மீது தார்ச் சாலைகள் அமைத்தல் வேண்டும். மேலும், இப்பணிகள் சாலை வேய்வு கட்டுப்பாட்டு குறியீடு (Pavement Condition Index) மதிப்பு இரண்டு அல்லது அதற்கு குறைவாக உள்ள பணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வகைப்பாடு – 3

சிறு பழுதடைந்த தார்ச் சாலைகளை புதுப்பித்து பராமரித்தல், இவ்வகைப்பாட்டின் கீழ் காலமுறை புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பிற்குத் தேவையான சாலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், சாலையின் மேற்பரப்பில் உள்ள குழிகள் மற்றும் சேதங்களைச் சீர் செய்து, புதுப்பித்து பராமரித்தல் வேண்டும்.

சாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னுரிமை காரணிகள் :

  1. மக்கள் தொகையினைக் கருத்தில் கொள்ளாமல், இதுவரை இணைக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் சாலைகளைத் தார்ச் சாலைகளாக அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  2. பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் செல்லும் தார்ச் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  3. சந்தைப் பகுதிகள், கல்விக் கூடங்கள் மற்றும் சுகாதார நிலையங்களை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  4. பிரதம மந்திரி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டச் சாலைகளை வலுப்படுத்தவும், ஐந்து வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டச் சாலைகளைப் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு செய்யவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2015-16 (ம) 2016-17)

  • தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2015-16 –ஆம் ஆண்டில், திருவள்ளுர் மாவட்டத்தில் 136.252 கி.மீ நீளத்திற்கு 82 தார்ச் சாலைப்பணிகள் ரூ.2655.21 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிவுற்றது.
  • தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 –ஆம் ஆண்டில், திருவள்ளுர் மாவட்டத்தில் 121.547 கி.மீ நீளத்திற்கு 69 தார்ச் சாலைப்பணிகள் ரூ.2703.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிவுற்றது.

 தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2017-18)

தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 –ஆம் ஆண்டில், திருவள்ளுர் மாவட்டத்தில் 106.01 கி.மீ நீளத்திற்கு 50 தார்ச் சாலைப்பணிகள் ரூ.2478.53 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள 09.01.2018 அன்று நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 02.02.2018 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.